Mazhai Kuruvi | AR Rahman | Vairamuthu | Chekka Chivantha Vaanam | Mani Ratnam

மழைக்குருவி🌧️🕊️ Part 1 :
இசையா?🎵தமிழா?✍️அற்புதமான வைர வரிகளுக்கு பொருந்திய இசையின் குரல்!🌹
எத்தனை முறை கேட்டுருப்போம் இப்பாடலை?! ஒவ்வொரு முறை கேட்கும் போதும் ஒரு இனம் புரியாத வலியும், சோகமும் நம்மையும் சூழும்!😪 பாடலின் வரிகளை நாம் உணர்ந்து ரசிக்கும் முன், அந்த குரல் தரும் போதை.. அந்த பாடலுக்குள் இழுத்து சென்றுவிடுகிறது!🌹

இயற்கையை 🏞️ பற்றிய பாடல் என தான் கேட்க ஆரம்பிக்கிறோம். ஆனால் சரணம் தொடங்கும் போது..
 " நீ கண்தொட்டு கடுந்தேகம் காற்றோ? - இல்லை
கனவில் நான் கேட்கும் பாட்டோ?
இது உறவோ இல்லை பரிவோ?" னு
அந்த குரல் வெளிபடுத்தும் சோகத்தில் கரைந்தே போகின்றோம்! 🥺♥️ காதலில் இறப்பு, பிரிவு - அதன் வலிகளையும், வேதனைகளையும்,சோகத்தையும், வெறுமையையும் (emptyness)  இக்குரல் வெளிபடுத்தும் ஏக்கம் நம் மனதையும் தொடுகிறது! ☹️


 "வானவெளி மண்ணில் நழுவி விழுந்ததென்ன
திசையெல்லாம் மழையில் கரைந்து தொலைந்ததென்ன?"
இந்த வரிகளில் வரும் உயர்ந்த உணர்ச்சிவசப்பட்ட குரல்!😭இந்த அளவிற்கு காதல் துன்பத்தையும் தரும் என்பது போல இவரின் குரலுக்கு மட்டுமே சொந்தமாகிறது!♥️

Comments

Popular posts from this blog

Malarnthum Malaratha - Pasamalar | Carnatic written notations and Raga Bhaav and Song Analysis.

Kadhal Rojave : Raga Analysis, Written Notations, Song decoding and Review.

Bella Ciao Song History and Carnatic Notations